Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஷ்புவை ஆதரித்து 3-ந் தேதி அமித்ஷா பிரசாரம்

மார்ச் 31, 2021 09:20

சென்னை:மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். மீண்டும் அவர் வருகிற 3-ந் தேதி தமிழகம் வர உள்ளார்.நாளை மறுநாள் மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா 3-ந் தேதி காலை சிறப்பு விமானத்தில் தமிழகம் வருகிறார். அவர் அன்று நெல்லை,ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு ஆகிய 3 தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. முதலில் எங்கிருந்து பிரசாரத்தை தொடங்குவார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

3-ந் தேதி காலை முதலில் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் செய்தால்
குஷ்புவை ஆதரித்து பேசிவிட்டு பின்னர் ராமநாதபுரம் செல்வார். அப்படியில்லாமல்
நெல்லையில் பிரசாரத்தை தொடங்கினால் அன்று இரவு ஆயிரம் விளக்கு தொகுதிக்கு
வந்து பிரசாரம் செய்வார் அன்று இரவே அவர் டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்