Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்குவங்காளம் -2-ம் கட்ட தேர்தலில் 80.43 சதவீத வாக்குப்பதிவு

ஏப்ரல் 01, 2021 01:38

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 84.5 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதில் மம்தா பானர்ஜி- சுவெந்து அதிகாரி ஆகியோர் நேருக்குநேர் மோதும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும்.மாலை 6 மணி முடிவில் மேற்கு வங்காளத்தில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்