Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன -மோடி பிரசாரம்

ஏப்ரல் 02, 2021 03:09

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றனர். கேரளாவின் புனித பிம்பத்தை சிதைக்கும் வகையிலும், கலாச்சாரம் பின்தங்கியதாகவும் காட்ட எல்டிஎப் முயற்சி செய்கிறது.

சிறுபிள்ளைத் தனமான செயல்களால் புனித தலங்களின் உறுதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். புறந்தள்ளப்பட்ட கொள்கையை வைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது. கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்று மோடி  பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்