Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்காள மக்களை அவமதித்துவிட்டார் மம்தா- மோடி ஆவேசம்

ஏப்ரல் 03, 2021 12:39

ஹூக்ளி:மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:நந்திகிராமில், மே 2ம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்த்தோம். பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மக்கள் பணம் பெறுவதாக மம்தா கூறுகிறார். வங்காள மக்கள் சுயமரியாதை உள்ள மக்கள். மம்தா அவர்களே, நீங்கள் இப்படி கூறியதன் மூலம் வங்காள மக்களை அவமதித்துள்ளீர்கள்.மம்தாவின் குழப்பத்திற்கு ஒரு முக்கிய காரணம், அவரின் 10 ஆண்டு செயல்பாடு தொடர்பான அறிக்கை. பழைய தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

புதிய தொழில்கள், புதிய முதலீடு, புதிய வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளும் மூடப்பட்டுள்ளன.மே 2 ஆம் தேதி அமையும் அரசானது, இரட்டை என்ஜின் அரசு மட்டுமல்லாமல்,  இரட்டை நன்மை மற்றும் நேரடி நன்மை தரும் அரசாங்கமாகவும் இருக்கும். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை (விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம்) அமல்படுத்த முடிவு எடுக்கப்படும். முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்