Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜனதாவின் அச்சுறுத்தலுக்கு திமுக -காங்கிரஸ் கூட்டணி அஞ்சாது

ஏப்ரல் 03, 2021 12:44

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதாக கருதி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறை, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.இந்த சோதனையில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்கிற விவரம் வருமான வரித்துறையால் வெளியிடப்படவில்லை. இவை அனைத்துமே தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருத வேண்டும்.

இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது. வெற்றியை நோக்கி பீடுநடை போட்டு வருகிற தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, பா.ஜ.க.வின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை.மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிற பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டவும், அ.தி.மு.க.வின். அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மக்கள் தயாராகி விட்டார்கள்.

கடைசி நேரத்தில் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி முழு தோல்வியடைந்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியினர் எதிர்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டிருக்கிறார்கள். இதை முறியடித்து மக்களின் பேராதரவோடு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பீடுநடை போடும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன் என்று அழகிரி கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்