Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?- மு.க.ஸ்டாலின் பதில்

ஏப்ரல் 04, 2021 08:54

சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியிருந்தார். கேள்வி: இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டு துறையின் கீழ் இருக்கும் இந்து கோவில்களை எல்லாம் மற்ற வழிபாட்டு தலங்களை போல, இந்து மத ஆன்றோர்கள், சான்றோர்கள் நிர்வாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையை உங்கள் அரசு ஏற்குமா?

இதுகுறித்து, கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், ரூ.523 கோடியில் 4724 திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்திய அரசுதான் தி.மு.க. அரசு - இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆலயங்கள் குடமுழுக்கிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு, இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜெகன்னாதர் ஆலயம் முதலிய திருக்கோவில்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்கு ஆண்டுக்கு ஒருமுறை 1 லட்சம் பேருக்கு - தலா ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. அரசு 1989-ல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைத்திருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி கோவில்களின் நிர்வாகம் மேலும் சிறப்புடன் நடைபெறுவதற்குத் தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியான உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கும் திறந்த மனம் கொண்டது என்று மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

தலைப்புச்செய்திகள்