Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

ஏப்ரல் 04, 2021 11:43

கோவை:கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்.

அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டு விடுவேன். எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார் அதே போல நானும் நடிப்பேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா என பிறகு முடிவு எடுப்பேன். அரசியலில் சில மிரட்டல்கள் வந்தன என்று கமல்ஹாசன் கூறினார்.அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக கமல் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்