Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயி மகன் விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்றார்

ஏப்ரல் 08, 2021 06:05

கர்நாடகா: கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2-வது மகன் பிரசாந்த்.

இவர் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதன படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்