Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மீண்டும் முழு லாக்டவுன்? என்ற செய்தி முற்றிலும் வதந்தி: சுகாதாரத் துறையின் தெளிவான விளக்கம்!

ஏப்ரல் 08, 2021 09:48

சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கம் போடும் திட்டம் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் கொரோனா பாதிப்பு 4 இலக்கத்தில் சில நேரங்களில் 5000-ஐ நெருங்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு குறித்து சுகாதாரத் துறை அளித்த விளக்கத்தில் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தி. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல் பொய்யானது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மற்றபடி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

இதை ஏற்கெனவே ராதாகிருஷ்ணனும் தெளிவுப்படுத்தியுள்ளார். பெரும்பாலும் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. மற்றபடி தமிழகம் முழுவதும் ஊரடங்கு என்பது இருக்காது என்றே தெரிகிறது. பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்