Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சற்று சரிவில் தங்கம் விலை 

ஏப்ரல் 08, 2021 09:51

சென்னை: தங்கம் விலையானது கமாடிட்டி சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டது. இதற்கிடையில் இன்றும் இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகிறது.

நடப்பு காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்குவதற்கான திட்டத்தினை, ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு பலமான வீழ்ச்சியை பதிவு செய்தது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியா பயன்படுத்தும் தங்கத்தின் தேவையில் பெரும்பகுதியினை இறக்குமதி செய்கிறது. தற்போது தேவை அதிகரித்து வரும் நிலையில் இறக்குமதி இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலை இந்தியாவில் தங்கத்தின் விலையானது 1 வருடத்தில் இல்லாத அளவு, கடந்த வாரத்தில் 44,100 ரூபாயினை தொட்டது. எனினும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க பத்திர விளைச்சலில் சற்று மென்மையான நிலை, ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. 

முதலீட்டாளார்கள் கவனம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் டாலரின் மதிப்பு மற்றும் பத்திர லாபத்தினை உன்னிப்பாக கண்கானித்து வருகின்றனர். ஏனெனில் விலைமதிப்பற்ற உலோகம் ஒரு அமெரிக்க டாலரால் ஆதரிக்கப்பட்டது. இது அதிகரித்தால் 1760 டாலர்களையும், இதே 1680 டாலர்களையும் ஆதரவாக கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது இந்த இரு லெவல்களுக்கும் இடையே காணப்படுகிறது. ஆக இந்த லெவல்களை உடைக்கும் பட்சத்தில் நல்ல மாற்றம் காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்