Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக வேட்பாளருக்குக் கரோனா; அரசு மருத்துவமனையில் அனுமதி

ஏப்ரல் 08, 2021 09:52

ஈரோடு: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் எஸ்.ஜெயக்குமார். சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயக்குமார், வாக்குப்பதிவு நடந்த 6-ம் தேதியன்று பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப் பதிவினைப் பார்வையிட்டார்.

தலைப்புச்செய்திகள்