Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஊரடங்கு வேண்டாம்: அம்பானி மகன்

ஏப்ரல் 08, 2021 01:04

மும்பை: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு அம்பானி மகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவிலும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அனில் அம்பானி மகன் அன்மோ அம்பானி “நடிகர்கள் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தலாம், கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம், அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தலாம். ஆனால் ஏழை மக்கள் பொருளாதரத்திற்காக நடத்தும் தொழில் அரசுக்கு அத்தியாவசியமானதாக இல்லை. இந்த அத்தியாவசியமற்ற தொழில்கள்தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்