Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுமக்களுக்கு உதவ அனுமதி வேண்டும்: திமுக கோரிக்கை!

ஏப்ரல் 09, 2021 06:20

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு உதவி செய்ய திமுகவை அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல்வேறு
கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், கபசுர குடிநீர், மாஸ்க் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கவும் திமுக ஒன்றிணைவோம் வா என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை மாநிலத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத கட்சி செயல்பாடுகளை தொடர சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவ திமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தர வேண்டும் என திமுக கடிதம்  மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்