Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் மாம்பழம் மகசூல் அதிகமாக இருந்தும் உரிய விலைக்கு விற்க முடியவில்லை

ஏப்ரல் 09, 2021 06:21

சேலம்: மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருவிழாக்கள், சந்தைகளுக்கு கடந்த ஆண்டை போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இதே நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மா மரங்களில் மகசூல் அதிகமாக இருந்தும், அதை உரிய விலைக்கு விற்க முடியாமல் போனது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.

இந்த ஆண்டு சீசனிலாவது போதிய வருவாய் பெறலாம் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போதும் சீசன் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்