Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க மறுப்பு!

ஏப்ரல் 09, 2021 08:43

புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக கவர்னரும்  ஒப்புதல் அளித்தார். 

இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார்,சுப்ரீம் கோர்ட்டில்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்