Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்:  தெலுங்கான முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் 09, 2021 08:44

ஐதராபாத்: தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்  உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, போலீசாருக்கு  அவர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்திர சேகர் ராவ்  கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவலால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்களும், பணியாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 

அவர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்