Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடல் வெப்பநிலை சோதனைக்கு பிறகே பயணம்

ஏப்ரல் 09, 2021 10:02

மதுரை: பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் கட்டமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பயணிகள் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 50 சதவீத பயணிகள் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டார்.

ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு இன்று போக்குவரத்து சுகாதார ஊழியர்கள் பஸ் நிலைய வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

அரசு பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அரசு பஸ்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மதுரை மாவட்டம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளை பஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இது தவிர பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலைய ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்