Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடையின் நேரத்தை குறைக்க அரசு பரிசீலனை

ஏப்ரல் 09, 2021 10:06

சென்னை: கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால் சென்னையில் 300-க்கும் மேற்பட்ட மதுகடைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளன.


அந்த அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மது கடைகளில் கூட்டமாக நின்று மது பிரியர்கள் மதுவாங்குவதால் தொற்று பரவக்கூடும் என கருதி அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்படுகின்றன.


தடுப்பு கட்டைகள் அமைக்க இடவசதி உள்ள கடைகளில் இந்த பணி நடைபெற்று வருகின்றன. நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் கிருமி நாசினி உள்ளிட்ட சுகாதார தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பார்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய் மைப்படுத்தும் பணியும் நடை பெறுகிறது. மதுபிரியர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அனைத்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக மதுக டைகள் நேரத்தை குறைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள் செயல்படுகிறது. அந்த நேரத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் பார்கள் மற்றும் மதுகடை செயல்படும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்