Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மராட்டிய மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு 

ஏப்ரல் 10, 2021 08:04

மும்பை: மராட்டிய மாநிலத்தில் வார இறுதி நாட்களில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்தது.

மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொற்றை கட்டுப்படுத்த, அந்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நோய் பாதிப்பு குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த ஊடங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும். அதன்படி வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்தது. இது வருகிற திங்கட்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்