Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காட்டு யானைகளால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

ஏப்ரல் 10, 2021 11:40

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 8-க்கும்  மேற்பட்ட வீடுகளை யானைகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரை கண்டித்து, நூற்றுக்கணக்கான அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று  பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து யானை அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,  இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்