Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பப்ஜி முழுதாக தடை: நேபால்

ஏப்ரல் 14, 2019 06:30

நேபால்: பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல் வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. 

இதனால், முதல் முறையாக சில மாதங்களுக்குமுன் வேலூர் பல்கலைக்கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் மாவட்டத்தில் இந்த விளையாட்டை தடை செய்யப்பட்டது.  இன்னும் இந்தியா முழுக்க இந்த விளையாட்டு தடை செய்யப்படவில்லை.  
 
இந்நிலையில் பப்ஜி விளையாட்டை நேபாள அரசு பப்ஜி கேமை முழுவதுமாக தடை செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாளின் தொலைதொடர்பு துறையின் துணை இயக்குநர் சந்தீப், சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்றார். இந்த தடை நேற்று முதல் அமலுக்குவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் கர்நாடாக மாநிலத்தில் உள்ள கடாக் பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தனது கல்லூரி தேர்வில் பாடம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாததால், பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதினார். அவரை அழைத்து கல்லூரி நிர்வாகமும் பெற்றோர்களும் விசாரித்தபோது திடுக்கிடும் விஷயத்தை அவர் தெரிவித்தார்.  
 

 

தலைப்புச்செய்திகள்