Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிமக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

ஏப்ரல் 13, 2021 06:25

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடனான காணொலி கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சனிக்கிழமை நடத்தினார். அதன் பிறகு அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘ஒருபுறம் உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளையில், மேலும் பல தடுப்பூசிகளுக்கும் தாமதமின்றி உரிய அனுமதிகளை
அளித்து நாட்டில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பது விவேகமானதாக இருக்கும். அதேபோல, தடுப்பூசி கிடைக்கும் நிலையை அதிகரிப்பதுடன், தடுப்பூசி போடுவதற்கான தகுதியையும் வயது மட்டுமின்றி, தேவை, பாதிப்பு நேரிடக்கூடிய
அபாயத்தை அடிப்படையாகக் கொண்டு விரிவுபடுத்த வேண்டும்.

தற்போது சில மாநிலங்களில் 3 அல்லது 5 நாட்களுக்குப் போதுமான தடுப்பூசிகள்தான் இருப்பில் உள்ளன என்ற தகவலும் வருகிறது. எனவே, குறிப்பிட்ட ஒரு
மாநிலத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும், அங்கு கொரோனா பரவல் நிலை, எதிர்காலத்தில் பரவக்கூடிய கணிப்பை அடிப்படையைக்
கொண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்கும் அதேநேரம், இ்ந்தக்கால இடர்பாடுகளில் இருந்து மக்களை காக்கும் விதமாக குறைந்தபட்ச மாதாந்திர
வருவாய் உறுதித்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனின் வங்கிக் கணக்குக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க
வேண்டும்.

மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்