Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீன்பிடி தடைக்காலம் அமல்- கடலூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

ஏப்ரல் 15, 2021 05:27

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சித்திரைப்பேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, கிள்ளை, நல்லவாடு உட்பட 49 கிராமங்கள் உள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் 2,000 பைபர் படகு, 1,500 கட்டுமர படகு, 500 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கப்படும். இது கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையிலும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்து மீன்கள் கிடைத்திடும் வகையிலும் மத்திய அரசால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் 2 மாதங்கள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தற்போது வங்ககடலில் ஏப்ரல் 16 முதல் ஜுன் 15-ந் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்திரம் பொருத்தப்பட்ட 4 ஆயிரம் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரை திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலைம் தொடங்கியது. எனவே கடற்கரையில் சுமார் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது. இந்த தொழிலை நம்பி உள்ள ஐஸ் கம்பெனிகளும் முடங்கி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்