Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிவு

ஏப்ரல் 15, 2021 07:22

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 98.01 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 97.91 அடியானது.

அணைக்கு வினாடிக்கு 80 கன அடியாக இருந்த நீர்வரத்து 92 இன்றி அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரியில் 1200 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்