Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்க தேர்தல்: வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்ற பிரதமர் மோடி அழைப்பு

ஏப்ரல் 17, 2021 06:11

மேற்கு வங்கத்தில் 45 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்கத் தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டுகிறேன். குறிப்பாக இளம் வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்4 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மாநிலத்தில் 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. 5-ம் கட்ட தேர்தல் இன்று (ஏப் 17) நடைபெறுகிறது. ஜல்பைகுரி, கலிம்பாங், டார்ஜிலிங்புர்பா பர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 32-ல் திரிணமூல் காங்கிரஸும் 10-ல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளும் வென்றன. பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 23-ல் திரிணமூல் கட்சியும் 22-ல் பாஜகவும் அதிக வாக்குகளைப் பெற்றன. ஆனால் சதவீத அடிப்படையில் பாஜக (45%) முதலிடத்தையும் திரிணமூல் கட்சி (41.5%) இரண்டாம் இடத்தையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்