Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது

ஏப்ரல் 20, 2021 06:34

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். 
மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.  இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.  தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
கொரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.

தலைப்புச்செய்திகள்