Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் நிறுவனத்தில் பெண் நிர்வாகியிடம் ஆன்லைனில் ரூ.3.98 கோடி மோசடி

ஏப்ரல் 23, 2021 11:38

புனே: மராட்டிய மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் பெண் நிர்வாகி ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.3.98 கோடியை இழந்துள்ளார். 60 வயதான அந்த பெண் நிர்வாகிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக வலைதளத்தில் இருந்து நண்பராக இணைய ஒருநபரிடம் வேண்டுகோள் ஒன்று வந்தது. அதை பெண் நிர்வாகி ஏற்று கொண்டார்.

அதன் பிறகு அந்த நபர் பெண் நிர்வாகிகயிடம் 5 மாதங்களுக்கு மேலாக சமூக வலைதளத்தில் சாட்டிங் செய்து நம்பிக்கையை பெற்றார். அப்போது பெண் நிர்வாகிக்கு பிறந்தநாள் பரிசாக ஐபோன் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் பரிசுக்கான சுங்க அனுமதிக்காக டெல்லி விமான நிலையத்தில் ஒரு தொகையை பெண் நிர்வாகியை செலுத்த வைத்தார்.

பின்னர் பெண் நிர்வாகிக்கு நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதற்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூரியர் ஏஜென்சி பிரதிநிதிகள் சுங்க அதிகாரிகள் பேசுவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய பெண் நிர்வாகி 207 பரிவர்த்தனைகளில் 27 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.3 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரத்து 500-ஐ அனுப்பி உள்ளார்.

ஆனால் அவருக்கு நகை உள்ளிட்ட எந்த பரிசு பொருளும் வரவில்லை. இதனால்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் நிர்வாகி போலீசில் புகார் செய்தார்.

தலைப்புச்செய்திகள்