Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி மீண்டும் திறப்பு

ஏப்ரல் 24, 2021 06:11

இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டு போரில் முல்லைத்தீவு மாவட் டம் முள்ளிவாய்க்காலில்ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். இதன் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி கடந்த 2019-ல் நிறுவப்பட்டது.

இந்த நினைவு ஸ்தூபி கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு திடீரென இடித்து அகற்றப்பட்டது. இதை கண்டித்து ஏராளமான மாணவர்களும் உள்ளூர் மக்களும் பல்கலைக்கழகம் முன்பு திரண்டு போராடத் தொடங்கினர். அன்று முதல் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் போராட்டம் வலுப்பெற்றது.

இதையடுத்து முள்ளிவாய்க் கால் நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த ஜனவரி 11-ம் தேதி அதே இடத்தில் புதிதாக நினைவு ஸ்தூபி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தப் பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து முள்ளி வாய்க்கால் நினைவு ஸ்தூபி நேற்று மாணவர்களால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்