Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப்பில் 6 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு

ஏப்ரல் 25, 2021 05:36

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.. இந்த துயரம் பற்றி அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக தலைவர் சுனில் தேவ்கன் கூறியதாவது:-

உதவி வழங்குமாறு மாநில நிர்வாகத்தை பல முறை கேட்டுக்கொண்டோம். ஆனால் தேவையான உதவியைச் செய்ய யாரும் முன்வரவில்லை. 2 பெண்கள் உள்பட 6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். அவர்கள் மரணம் அடைந்த பின்னர்கூட வெறும் 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள்தான் எங்கள் ஆஸ்பத்திரிக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் வினியோகத்துக்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று முக்கிய ஆக்சிஜன் வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை தடுப்பதற்காக ஆக்சிஜன் பிரிவுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்