Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தூரில் நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா மையம்

ஏப்ரல் 25, 2021 09:34

நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அமைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ‘ராதா ஸ்வாமி சத் சங்’ என்ற ஆன்மிக அமைப்பு இந்தியா உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில்இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘ராதா ஸ்வாமி சத் சங்’ சார்பில் கடந்த ஆண்டு டெல்லியில் 10,000 படுக்கை வசதிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கரோனா மையம் திறக்கப்பட்டது. இதே அமைப்பு சார்பில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 6,200 படுக்கை வசதிகளுடன்கூடிய நாட்டின் 2-வது மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 600 படுக்கை களுடன் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் படுக்கை வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளன. இங்கு அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் உள்ளன. மேலும் நோயாளிகளின் பொழுது போக்குக்காக பிரம்மாண்ட எல்இடி திரைகளும் அமைக்கப்பட் டிருக்கிறன. இவற்றின் மூலம் ராமாயண காட்சிகள், ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து நோயாளிகளுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் படுக் கைகள் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளி குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவர் பயன்படுத்திய படுக்கை அகற்றப்பட்டு புதிய படுக்கை பொருத்தப்படுகிறது. அப்போலோ, மெடிந்தா, பாம்பே உள்ளிட்ட 4 மருத்துவமனைகளின் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 36 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு தன்னார்வ உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்