Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு- சந்திரன் உதயமான அபூர்வ காட்சி

ஏப்ரல் 27, 2021 04:21

கன்னியாகுமரி: ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமான அபூர்வ நிகழ்வு நடந்தது. அதாவது, அரபிக்கடலில் மாலை 6.20 மணிக்கு சூரியன் இளம் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவில் கடலுக்குள் மறைந்தது. அதேநேரம் கிழக்கே அமைந்துள்ள வங்கக்கடலில் வெள்ளை நிறத்தில் பந்து போன்ற வடிவில் சந்திரன் உதயமானது.

இந்த இரண்டு அபூர்வ நிகழ்வுகளும் நேற்றுமாலைஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரி கடற்கரையில் சித்ரா பவுர்ணமி அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்