Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு நன்கொடை வழங்கிய பேட் கம்மின்ஸ்

ஏப்ரல் 27, 2021 06:59

இந்தியாவில் கொரோனா 2-வது அலை சூறாவளியாக அடித்து வருகிறது. இந்த சூறாவளியில் அப்பாவி பொதுமக்கள் கொத்துகொத்தாக சிக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்