Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்கள் ‘பைத்தான்’ ஏவுகணைகளை எடுத்துச்செல்ல அனுமதி

ஏப்ரல் 29, 2021 06:01

புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பொதுத்துறை நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானம், தேஜாஸ். இந்த வகை 89 விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்கு கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், 5-வது தலைமுறை ‘பைத்தான்-5’ வானில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணையை எடுத்துச்செல்வதற்கு தேஜாஸ் போர் விமானங்களுக்கு நேற்று முன்தினம் அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கான சோதனை, கோவாவில் மிகவும் சவாலான சூழலில் நடத்தப்பட்டது. வானில் அதிவேகமாக நகர்ந்த இலக்குகளை, தேஜாஸ் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பைத்தான்-5 ஏவுகணைகள் 100 சதவீதம் துல்லியமாகத் தாக்கின. கோவாவில் நடைபெற்ற சோதனைக்கு முன்னால், தேஜாஸ் போர் விமானத்தில் பைத்தான் ஏவுகணையை சுமந்து செல்வதற்கான தீவிரமான சோதனைகள் பெங்களூருவில் நடத்தப்பட்டன.தாக்குதலுக்கான பைத்தான்-5 ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் தகுதியைப் பெற்றிருப்பது தேஜாஸ் விமானங்களின் ஆயுதத் திறனை வெகுவாக உயர்த்தும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்