Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா மேலாண்மை உதவி: ராணுவ தளபதி விளக்கம்

ஏப்ரல் 30, 2021 06:02

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதிலும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மேலாண்மை உதவிப் பணிகள் தொடர்பாகவும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராணுவம் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் மேலாண்மை உதவி பணிகள் பற்றியும் மோடியிடம் நரவானே விளக்கினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாத்தியமான இடங்களில் ராணுவம் சார்பில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருவது பற்றியும் மக்கள்அருகாமையில் உள்ள மருத்துவமனைகளை அணுகலாம் என்றும் மோடியிடம் நரவானே தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் பலமாநிலங்களிலும் தயாராக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் வாகனங்களை கையாள சிறப்புதிறன்கள் தேவை.

இந்த பணிகளை மேற்கொள் பவர்களுக்கு உதவியாக ராணுவம் செயல்படுவதையும் நரவானே பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்