Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா: பாகிஸ்தானில் ஒரே நாளில் 201 பேர் பலி

ஏப்ரல் 30, 2021 06:10

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 201 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 201 பேர் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பலி இதுவாகும்.

பாகிஸ்தானில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகள் கரோனா பாதிப்பில் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளன. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்