Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு - சுகாதார மந்திரி தகவல்

மே 01, 2021 07:32

மும்பை: மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை மக்களை வதைத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3-வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜூலை, ஆகஸ்ட்டில் 3-வது அலை ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் 3-வது கொரோனா அலையை தடுக்க தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும், என்றார்.
இதேபோல 3-வது அலை உருவானால் அதை எதிர்கொள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும், மருந்துகளை போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்