Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நரேந்திர மோடியுடன் கடற்படை தளபதி சந்திப்பு: கரோனா விவகாரம் குறித்து ஆலோசனை

மே 05, 2021 05:55

கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கரோனா நோயாளிகள் பலர் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காமல் உயிரிழக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்தவும், போதிய ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், ராணுவ மருத்துவமனைகளையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கரோனா பரவலை சமாளிக்க கடற்படை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதன் தலைமை தளபதி கரம்பீர் சிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று எடுத்துரைத்தார்.

அப்போது, நாட்டில் உள்ள கடற்படை மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக கரம்பீர் சிங் தெரிவித்தார். மேலும், கடற்படையில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தொற்றை சமாளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்