Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உருமாற்ற அடைந்த கரோனா குறித்து மார்ச் மாதமே மத்திய அரசை எச்சரித்தோம்: விஞ்ஞானிகள் வேதனை

மே 05, 2021 10:04

உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதத்திலேயே மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்துக்கு மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா அளித்த நேர்காணலில் கூறும்போது, “ நாங்கள் கரோனா பரவல்குறித்து முன்னரே குரல் எழுப்பினோம். நாம் ஆபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதற்கு அது ஒரு எச்சரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அத்தகவல் பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அதிகப்படியான தொற்று பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ராய்ட்டர்ஸில் இது குறித்து செய்தி வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.

உருமாற்ற அடைந்த கரோனா வைரஸ் காரணமாக இந்தியவில் தொற்று மற்றும் பலி எண்ணிகை அதிகரிக்கும் என்று நாங்கள் முன்னரே மத்திய அரசை எச்சரித்தோம். ” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்