Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.,வுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து 

மே 06, 2021 06:00

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே விளங்கி வருகிறது. 2011ஆம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது முதல் அதிமுக வேட்பாளர்கள் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் 40 ஆயிரத்து 402 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்

.திருப்பூர் மாநகர் மாவட்ட அ. தி.மு.க.சார்பில், வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.,வுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு சாந்தி தியேட்டர் அருகில் உள்ள தேர்தல் காரியாலத்தில் நடந்தது. பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். 

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.ஆர்.ஜான்,  மாவட்ட பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் பகுதி செயலாளர் விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, பகுதி செயலாளர்கள் கணேஷ், பட்டுலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பூலுவபட்டி பாலு,  ஒன்றய கவுன்சிலர் ஐஸ்வரியா மஹாராஜன்,கூட்டுறவு சங்கத் தலைவர் கரைப்புதூர் விஸ்வநதன், என்.எஸ்.கே.நகர் சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்