Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை

மே 06, 2021 04:19

திருப்பூர்: மே தினத்தை முன்னிட்டு இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது...

இது பற்றி இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திரா சுந்தரம் பேசுகையில், மே தினத்தன்று கஷ்ட்டப்படும் தொழிலாலர்களுக்கு நம் அறக்கட்டளை சார்பில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி செருப்பு தைப்பவர்களுக்கு உதவலாம் என்று முடிவெடுத்தோம். 

பழைய பேருந்து நிலையம் புஷ்பா தியேட்டர் பகுதிகளில் அவர்களை நேரில் சந்தித்து சால்வை போர்த்தி மதிய உணவு மற்றும் செலவுக்காக சிறு தொகையை வழங்கினோம். தற்போது அறுந்த செருப்புகளை யாரும் தைப்பது இல்லை. புதிதாக வாங்கிக் கொள்கிறார்கள், அதனால் நாங்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் எதிர்பாரமல் நீங்கள் வந்து உதவியது மகிழ்ச்சியாக உள்ளது என்று எங்களிடம் தெரிவித்தார்கள். மேலும் உதவி தேவைபட்டால் நாங்கள் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளோம் என கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்