Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக அளவில் கரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவு

மே 07, 2021 05:37

சர்வதேச அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், உலகம்முழுவதும் கடந்த வாரம் ஏற்பட்ட ஒட்டுமொத்த கரோனா
பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த வாரம் உலக அளவில் புதிதாக 57 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 93,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதே
காலக்கட்டத்தில், இந்தியாவில் 26 லட்சம் பேர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 23,231 பேர் உயிரிழந்திருக்கின்றனர். உலக அளவிலான
ஒட்டுமொத்த உயிரிழப்பில் இது 20 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

தலைப்புச்செய்திகள்