Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகள் வழங்கும் மருந்துகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பு

மே 07, 2021 06:07

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காத சூழல் எழுந்துள்ளது. இதனைக்
கருத்தில்கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் இந்த உதவிகளை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதுவரை 31 மாநிலங்களில் உள்ள 38 அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆக்சிஜன்
சிலிண்டர்கள், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில் டெல்லியில் உள்ள 9 மருத்துவமனைகளும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளும்
அடங்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருத்துவ உபகரணங்கள் பாரபட்சமின்றி சமமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்
சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்