Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

மே 07, 2021 06:09

சென்னை: தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (68) உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தைச்
சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் வென்ற இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சி துறை அமைச்சரானார்.

தொடர்ந்து 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அவர் பின்னர் தி.மு.க.வில் இணைந்ததால் பதவியை ராஜினாமா
செய்தார். பின்னர் 2009-ம் ஆண்டு இடைத்தேர்தல், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வென்றுள்ளார். தூத்துக்குடி
தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு ஜெயகாந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்