Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவியேற்கும் வி.செந்தில்பாலாஜி

மே 07, 2021 06:18

சென்னை: தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள்
பதவியேற்கிறார்கள். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.செந்தில்பாலாஜிக்கு வயது 46. இவரது
சொந்த ஊர் கரூர் ராமேஸ்வரப்பட்டி. 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்த
அவர் 2006-ம் ஆண்டு கரூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கரூரில் போட்டியிட்டு
போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் தகுதி
நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்த அவர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி
பெற்றார். மேலும் கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

தலைப்புச்செய்திகள்