Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓடிடியில் வெளியாகும் மற்றொரு விஜய் சேதுபதி படம்

மே 07, 2021 10:34

விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாளப் படமொன்று ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மலையாளத்தில் ஜெயராமுடன் 'மார்க்கோனி மித்தாய்' படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் வி.எஸ்.இந்து இயக்கத்தில் உருவான '19(1)(a)' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் ட்ரெய்லருடன் கூடிய அறிவிப்பு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'19(1)(a)' படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணிபுரிந்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்