Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு

ஏப்ரல் 18, 2019 09:14

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 
 
இந்நிலையில் மதியம் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.   

1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரியகுளத்தில் 32.32 சதவீதம், பெரம்பலூரில் 39.85 சதவீதம், தருமபுரியில் 43.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும்” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

தலைப்புச்செய்திகள்