Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஸ்திரியா, செக் குடியரசில் இருந்து 896 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா வருகை

மே 09, 2021 06:40

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.  இந்நிலையில், செக் குடியரசு நாட்டில் இருந்து 500 ஆக்சிஜன் சிலிண்டர்களும், ஆஸ்திரியாவில் இருந்து 396 ஆக்சிஜன் சிலிண்டர்களும் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. மேலும், ஆக்சிஜன் சுவாசக் கருவிகள், முக கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களும் இதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

தலைப்புச்செய்திகள்