Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடுப்பூசி போட்டுக்கொண்ட ரிஷிகேஷ் எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா

மே 09, 2021 07:26

ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா நோயாளிகளை தினசரி சந்திக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் விஜயேஷ் பரத்வாஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்