Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் சுதீப்?

மே 09, 2021 07:36

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி, 2.O படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என மற்ற மொழி ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைத்துள்ள ஷங்கர், இப்படத்திற்காக கன்னட நடிகர் சுதீப்பை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்