Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைக்கேல் ஸ்லேடருடன் மதுபான விடுதியில் மோதலா?- கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மறுப்பு

மே 10, 2021 06:44

மாலத்தீவில் மதுபான விடுதியில் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடருடன் மோதலில் ஈடுபட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 14-வது சீசனில் வீரர்களுக்கு அடுத்தடுத்து கரேனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை முதல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. கரோனா அச்சம் காரணமாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமானப் போக்கு
வரத்திற்கு தடை நீடிப்பதால்,ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர்கள், வர்ணணையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் தற்போது மாலத்தீவில் தங்கியுள்ளனர். அவர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்நிலையில், மாலதீவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதல் ஏற்பட்
டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு ஸ்லேடர் குறுஞ்செய்தி அனுப் பியுள்ளார். அதில், வதந்திகளுக்கு இதில் எதும் இல்லை. நானும், டேவிட் வார்னர்ரும் சிறந்த நண்பர்கள். எங்களுக்குள் சண்டை எழ வாய்ப்பே இல்லை” என தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் கூறும்போது, “இதில் எந்தவித நாடக மும் இல்லை. இதுபோன்ற தகவல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் கூறியதுபோன்று எதுவும் நடைபெறவில்லை” என்றார்.
 

தலைப்புச்செய்திகள்